கொட்டிய குப்பையும் கொட்டப்போகும் குப்பையும்

இட்லிவடைக்கு இன்று பிறந்தநாள் என்று அறிந்தேன். வாழ்த்துகள். இணையத்தில் அநாமதேயம் என்பதன் சுவாரசியம் மறைந்து வெகுநாள் ஆகிவிட்டது. யாராயிருந்தால் என்ன, சரக்கு எப்படி என்கிற மனநிலைக்கு வாசகர்கள் பழகிவிட்டார்கள். இட்லிவடை யார் என்ற கேள்வி இன்று பெரும்பாலும் எழுவதில்லை. இட்லிவடைக்குப் பிறகு உதித்த பேயோன், தனது முன்னோர்களின் அனைத்து அருமை பெருமைகளையும் அடித்துக்கொண்டு போய்விட்டார். அவரது பாதிப்பில் எழுந்த நாயோன், சேயோன், மாயோன் வகையறாக்கள் இருக்குமிடம் தெரியாமலாகிப் போனதே சரக்கு முக்கியம் என்றாகியிருப்பதற்கான சாட்சி. இட்லிவடை இதுகாறும் … Continue reading கொட்டிய குப்பையும் கொட்டப்போகும் குப்பையும்